26 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

 துன்புறுத்தல்களுக்கு உள்ளான 26 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

by Staff Writer 17-04-2019 | 4:26 PM
Colombo (News 1st) குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த 26 பெண்கள் இன்று நாடு திரும்பினர். தற்காலிக வௌிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அவர்கள் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார். நாடு திரும்பிய பெண்களில் ஒரு பகுதியினர் ஒரு வருடத்திற்கும் குறைந்த காலம் குவைத்தில் பணிப்பெண்களாக சேவையாற்றியுள்ளனர். குவைத்தில் எதிர்நோக்கிய துன்புறுத்தல்கள் காரணமாக அவர்களில் ஐவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். நாடு திரும்பிய பெண்களுக்கு வீடு திரும்பத் தேவையான பஸ் கட்டணங்களை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியது.