அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எப்போதும் தயாராக உள்ளோம்: மஹிந்த ராஜபக்ஸ

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எப்போதும் தயாராக உள்ளோம்: மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

17 Apr, 2019 | 7:31 pm

Colombo (News 1st) அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தாம் எப்போதும் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்கும் உரிமை தமக்கு உள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ கூறினார்.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானித்து, உறுதியாக வெற்றி பெறக்கூடியவரையே ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெல்லன்வில ரஜமகா விஹாரைக்கு சென்றிருந்த போதே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவருடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவும் பெல்லன்வில ரஜமகா விஹாரைக்கு சென்றிருந்தார்.

சித்திரைப் புத்தாண்டு பாரம்பரிய முறைப்படி தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வு பெல்லன்வில விஹாரையில் நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்