by Staff Writer 16-04-2019 | 6:21 PM
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் 61 நாள் மீன்பிடித்தடை நேற்று (15) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட கிழக்குக் கரை பகுதிகளில் ஏப்ரல் , மே, ஜூன் மாதங்கள் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில்தான் கடல்வாழ் உயிரினங்கள் இனவிருத்தி செய்வதால் கடலில் மீன் வளத்தினை பெருக்கும் நோக்கில்
விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் 61 நாட்களுக்கு மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் மீன்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த மீன்பிடித்தடை காலப்பகுதியில் மீனவர்கள் தமது படகுகளை பழுது பார்த்தல் உள்ளிட்ட தொழில் ரீதியிலான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வார்கள்.