IPL Match: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

by Staff Writer 16-04-2019 | 7:00 AM
Colombo (News 1st) மும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான பந்துவீச்சு ஆற்றலால் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று ஏழாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ​போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்கள் நிறைவில் பெங்களூரு அணி 7 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது. ஏ.பி.டி. வில்லியர்ஸ் 51 பந்துகளில் அதிகபட்சமாக 75 ஓட்டங்களையும் மொயின் அலி 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 50 ஓட்டங்களையும் விளாசினர். பார்திவ் பட்டேல் 28 ஓட்டங்களை பெற்றதுடன் ஏனைய வீரர்கள் மிகக்குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்யப்பட்டனர். பந்துவீச்சில் லசித் மாலிங்க 4 விக்கெட்களை வீழ்த்தினார். 172 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றியிலக்கை அடைந்தது. குயின்டன் டி கொக் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற ஹர்திக் பாண்டியா 37 ஓட்டங்களை பெற்றார். ஏனைய வீரர்கள் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்யப்பட்டாலும் 19 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியிலக்கை அடைந்தது.