பிரான்ஸின் நொட்ரே டேம் தேவாலயத்தில் தீ

பிரான்ஸின் நொட்ரே டேம் தேவாலயத்தில் தீ

பிரான்ஸின் நொட்ரே டேம் தேவாலயத்தில் தீ

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 Apr, 2019 | 6:36 am

Colombo (News 1st) பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான நோட்ரே டேம் (Notre – Dame) தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

850 வருடங்கள் பழைமைவாய்ந்த குறித்த பேராலய கட்டடத்தின் கூரைப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

எனினும், தேவாலயத்தின் மணிக்கோபுரங்கள் இரண்டும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தேவாலயத்திற்குள் உள்ள கலைப்படைப்புக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்தும் சுமார் 500 தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, கட்டடத்தில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது மிகமோசமான சோக நிகழ்வு என பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தைத் தொடர்ந்து மிகப்பழைமை வாய்ந்த பேராலயத்தின் கட்டமைப்பு வலுவிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்