நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் தடை

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் தடை

எழுத்தாளர் Staff Writer

16 Apr, 2019 | 1:14 pm

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து ஹோமாகம, பாதுக்க, ஹொரன, கொட்டாவ மற்றும் அவிசாவளை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு வீசிய கடும் காற்றினால் பல பகுதிகளிலும் உள்ள 42,000 நுகர்வாளர்களுக்கு மின்சாரத்தை விநியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால், குறித்த பகுதிகளில் மின்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பன்னிப்பிட்டிய பகுதியில் மின்மாற்றி ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் சுலக்‌ஷன ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்