நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

எழுத்தாளர் Staff Writer

16 Apr, 2019 | 7:05 am

Colombo (News 1st) அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், வட மேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இடி மின்னல் தாக்கங்களை எதிர்ப்பார்க்க முடியும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அத்தோடு, நாட்டின் பல பகுதிகளில் உஷ்னமான வானிலை தொடரும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வட மத்திய மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவும் என, வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்