தட்டம்மை நோய் மும்மடங்காக அதிகரிப்பு

தட்டம்மை நோய் மும்மடங்காக அதிகரிப்பு

தட்டம்மை நோய் மும்மடங்காக அதிகரிப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

16 Apr, 2019 | 9:36 am

Colombo (News 1st) இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் சர்வதேச ரீதியில் தட்டம்மை நோயானது, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஆபிரிக்காவில் தட்டம்மை நோயானது 700 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தட்டம்மை நோய்த்தொற்று, நுரையீரல் மற்றும் மூளையைப் பாதிக்கும் தீவிர நோய் நிலைமையை உருவாக்கக்கூடியதாகும்.

யுக்ரைன், மடகஸ்கார் மற்றும் இந்தியாவில் தட்டம்மை நோய் அதிகம் பரவி வருவதுடன் மடகஸ்காரில் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இதுவரை குறைந்தது 800 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்