கருப்பைக்குள் குத்துச்சண்டை போடும் இரட்டைக் குழந்தைகள் (Video)

கருப்பைக்குள் குத்துச்சண்டை போடும் இரட்டைக் குழந்தைகள் (Video)

கருப்பைக்குள் குத்துச்சண்டை போடும் இரட்டைக் குழந்தைகள் (Video)

எழுத்தாளர் Bella Dalima

16 Apr, 2019 | 3:39 pm

தாயின் கருப்பைக்குள் குத்துச்சண்டை போடும் இரட்டைக் குழந்தைகளின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

சீனாவை சேர்ந்த 28 வயதான தாவோ என்பவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை கடந்த ஆண்டு ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது வயிற்றினுள் இருந்த இரட்டை பெண் குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதைப் பார்த்து பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார். உடனே அவர் அதனை வீடியோவாக எடுத்து, இணையத்தளத்தில் வெளியிட ஆரம்பித்தார்.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் பெரும் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது 2.5 மில்லியன் லைக்ஸ் மற்றும் 80,000 கருத்துகளைப் பெற்றுள்ளது.

வயிற்றினுள் சண்டையிட்ட குறும்பான அந்த இரட்டை பெண் குழந்தைகள் சமீபத்தில் பிறந்துள்ளன. அவர்களது தாய் விரும்பி சாப்பிடும் பழங்களான ‘செர்ரி’ மற்றும் ‘ஸ்டிராபெரி’ என்பனவற்றின் பெயர்களை அந்தக் குழந்தைகளுக்கு சூட்டியுள்ளார்கள்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்