ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

எழுத்தாளர் Staff Writer

16 Apr, 2019 | 7:00 am

Colombo (News 1st) மும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான பந்துவீச்சு ஆற்றலால் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று ஏழாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ​போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

20 ஓவர்கள் நிறைவில் பெங்களூரு அணி 7 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது.

ஏ.பி.டி. வில்லியர்ஸ் 51 பந்துகளில் அதிகபட்சமாக 75 ஓட்டங்களையும் மொயின் அலி 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 50 ஓட்டங்களையும் விளாசினர்.

பார்திவ் பட்டேல் 28 ஓட்டங்களை பெற்றதுடன் ஏனைய வீரர்கள் மிகக்குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்யப்பட்டனர்.

பந்துவீச்சில் லசித் மாலிங்க 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

172 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றியிலக்கை அடைந்தது.

குயின்டன் டி கொக் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற ஹர்திக் பாண்டியா 37 ஓட்டங்களை பெற்றார்.

ஏனைய வீரர்கள் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்யப்பட்டாலும் 19 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியிலக்கை அடைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்