அநுராதபுரத்தில் சிக்கிய கேரள கஞ்சா

அநுராதபுரத்தில் சிக்கிய கேரள கஞ்சா

அநுராதபுரத்தில் சிக்கிய கேரள கஞ்சா

எழுத்தாளர் Fazlullah Mubarak

15 Apr, 2019 | 7:36 am

கேரள கஞ்சா ஒரு தொகையை அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வீடொன்றை சோதனைக்குட்படுத்திய வேளையில் ஒன்றரை கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பல வருட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை இன்று அனுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்