இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மிதமான சுனாமி எச்சரிக்கை விடுப்பு

by Bella Dalima 13-04-2019 | 5:02 PM
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள சுலவேசி தீவிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மிதமான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழு பாதிப்புகள் இதுவரை வெளிவராத நிலையில், ஒருவர் பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ரிக்டர் அளவில் 7.5 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் சுமார் 4,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.