லண்டன் விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது

லண்டன் விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது

லண்டன் விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Apr, 2019 | 3:17 pm

Colombo (News 1st) லண்டன்  லூட்டன் விமான நிலையத்தில் ​வைத்து இலங்கையர்கள் நால்வர் பிரித்தானிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக BBC செய்தி வௌியிட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி அவர்கள் லூட்டன் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்பின்னர் நேற்று முன்தினம் (11) கைது செய்யப்பட்ட அவர்கள் நால்வரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

2000 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு இணங்க குறித்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர்கள் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்