மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அறிவித்தல்

மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அறிவித்தல்

மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

13 Apr, 2019 | 3:50 pm

Colombo (News 1st) தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இன்றும் (13) நாளையும் (14) நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அறிவித்துள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க நாடளாவிய ரீதியில் 1200 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக
திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மதுபாவனை தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை ஏற்பதற்காக விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான முறைப்பாடுகளை 011-2 192 192 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.

இந்த பிரிவு 24 மணித்தியாலமும் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்