அதிவேக நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு

அதிவேக நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு

அதிவேக நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Apr, 2019 | 4:14 pm

Colombo (News 1st) பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வழமையான தினமொன்றில் 75,000 முதல் 80,000 வரையிலான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கின்ற நிலையில், பண்டிகைக் காலத்தில் நாளொன்றுக்கு 1,50,000 வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக அதிவேக நெடுஞ்சாலை செயற்பாடு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்தார்.

இதனால் வாகனங்கள் உள்நுழைதல் மற்றும் வெளிச்செல்வதற்கான மேலதிக வாயில்களும் திறக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்