by Staff Writer 12-04-2019 | 3:56 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
வௌிநோயாளர் பிரிவின் மருத்துவ செயற்பாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும், அவசர சிகிச்சைகளும் சிறுவர்களுக்கான சிகிச்சைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பேச்சாளர் ஒருவரிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
சில கோரிக்கைகளை முன்வைத்து ஒரு சில வைத்தியர்கள் மாத்திரம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
வைத்தியர்களின் பிரச்சினைகள் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.