மது போதையுடன் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது

மது போதையுடன் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது

by Staff Writer 12-04-2019 | 3:49 PM
Colombo (News 1st) நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையுடன் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, மது போதையுடன் சாரதிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சுற்றிவளைப்பின் போது, வீதி ஒழுங்குகளை மீறிய 10,170 சாரதிகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.