தமிழர்களையும் தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது: ராகுல் காந்தி

தமிழர்களையும் தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது: ராகுல் காந்தி

தமிழர்களையும் தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது: ராகுல் காந்தி

எழுத்தாளர் Bella Dalima

12 Apr, 2019 | 4:32 pm

Colombo (News 1st) தமிழர்களையும் தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று முற்பகல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் எதிர்வரும் 18 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு காங்கிரஸ், பாரதிய ஜனதாக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, உரையாற்றியுள்ளார்.

மொழி, இனம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட இந்தியாவை புரிந்துகொள்ளாத நரேந்திர மோடி வெறுப்புணர்வு அரசியலைக் கொண்டு தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்