கிரிக்கெட்டை சீர்படுத்த விரும்பும் தலைவர்கள் யார் என்பதை தீர்மானிக்கப் போவதாக அர்ஜூன ரணதுங்க தெரிவிப்பு

கிரிக்கெட்டை சீர்படுத்த விரும்பும் தலைவர்கள் யார் என்பதை தீர்மானிக்கப் போவதாக அர்ஜூன ரணதுங்க தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Apr, 2019 | 8:33 pm

Colombo (News 1st) இனிவரும் தேர்தலில் தீர்மானமொன்றை எடுத்து, சூதாட்டக்காரர்களை அப்புறப்படுத்தி, கிரிக்கெட் விளையாட்டை சீர்படுத்த விரும்பும் தலைவர்கள் யார் என்பதை தீர்மானிக்கப் போவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டார்.

துரதிர்ஷ்டவசமாக 2015 ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தை ஸ்தாபித்த பின்னர் கிரிக்கெட் விளையாட்டு அழிவடைந்ததாகவும் தற்போது நிர்வாகத்தில் உள்ளவர்கள் பின்கதவால் சென்று ஜனாதிபதியையும் பற்றிப் பிடித்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் அர்ஜூன ரணதுங்க குற்றம் சாட்டினார்.

இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்