Super Four இறுதிப் போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது

Super Four மாகாணத் தொடரின் இறுதிப் போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது

by Staff Writer 11-04-2019 | 9:14 PM
Colombo (News 1st) Super Four மாகாண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டது. போட்டியில் லசித் மாலிங்க தலைமையிலான காலி அணியும் தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணியும் பலப்பரீட்சை நடத்தின. தம்புள்ளையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்களைக் குவித்தது. அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய லஹிரு திரிமான்ன 128 பந்துகளில் ஒரு சிக்ஸர், ​9 பௌண்டரிகளுடன் 115 ஓட்டங்களைக் குவித்தார். வனிந்து ஹசரங்க 53 பந்துகளில் ஒரு சிக்ஸர், 13 பௌண்டரிகளுடன் 87 ஓட்டங்களை விளாசினார். லஹிரு திரிமான்னவும் வனிந்து ஹசரங்கவும் ஐந்தாம் விக்கெட்டிற்காக 144 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எவ்வாறாயினும், கொழும்பு அணி பதிலளித்தாட தாயாரானபோது கடும் மழை பெய்ததுடன், மாலை 4 மணி வரையும் மழை நீடித்ததால் போட்டியை முடிவின்றிக் கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.