பூனாகலையில் மழை வீழ்ச்சி; வவுனியாவில் அதிக வெப்பம்

பூனாகலையில் 113 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி; வவுனியாவில் 37.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை

by Staff Writer 11-04-2019 | 4:20 PM
Colombo (News 1st) இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகப்படியான மழை வீழ்ச்சி பதுளை - பூனாகலை பகுதியில் பதிவாகியுள்ளது. பூனாகலையில் 113 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த காலப்பகுதியில் அதிக வெப்பநிலையாக 37.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை வவுனியாவில் பதிவாகியுள்ளது. வவுனியாவில் சாதாரண வெப்பநிலையை விட மூன்று பாகை செல்சியஸ் அதிகளவாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்