புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 11-04-2019 | 6:14 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக இந்து பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 02. வீட்டுப் பாவனைக்கான மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் கட்டணம் குறையுமே தவிர அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 03. மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மொஹமட் நசீம் மொஹமட் பைசர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 04. தென் மாகாண சபையைக் கலைப்பதற்கான வர்த்தமானியில் மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் கையொப்பமிட்டுள்ளார். 05. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாக, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. விமான நிலையத்தின் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 02. காஷ்மீர் பிரச்சினையை மேலும் தொடர விட முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 03. திபெத்திய மதத் தலைவரான தலாய் லாமா (Dalai Lama) டில்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 02. தேசிய குறுந்தூர நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளில், ஆடவர் பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரி சாம்பியனாகியுள்ளது. 03. மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் தம்புள்ளை அணி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது.