மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு மஹஜன எக்சத் பெரமுண வலியுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு மஹஜன எக்சத் பெரமுண வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

11 Apr, 2019 | 8:14 pm

Colombo (News 1st) மாகாண சபைத் தேர்தலை மேலும் தாமதப்படுத்தக்கூடாது என மஹஜன எக்சத் பெரமுண கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தது.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறுவதாகவும் பாராளுமன்ற சட்டத்திற்கு அமைய, தேர்தல் தொடர்பில் சபாநாயகருக்கோ பிரதமருக்கோ எந்தவொரு அதிகாரமும் இல்லை எனவும் மஹஜன எக்சத் பெரமுணவின் தலைவர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

தேர்தலை அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டம் பூரணப்படுத்தப்படவில்லை என தெரிவித்து, தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் உயர் நீதிமன்றத்திடம் பொருட்கோடலொன்றை கோர முடியும். எனினும், நாங்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளோம்

என தினேஷ் குணவர்தன மேலும் கூறினார்.

உடனடியாக தேர்தலை ஆணையாளர் நடத்த வேண்டும் எனவும் அவ்வாறு நடத்தத் தவறினால் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்