மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விசேட சுற்றிவளைப்பு

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விசேட சுற்றிவளைப்பு

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விசேட சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2019 | 7:06 am

Colombo (News 1st) மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் இன்று (11ஆம் திகதி) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த விசேட சுற்றிவளைப்பு இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என, போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்காக 8,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய வாகன விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரு நாட்களுக்கு நாடு முழுவதுமுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என, கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு மதுபானசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதியும் மூடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் கலால்வரி திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்