பூனாகலையில் 113 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி; வவுனியாவில் 37.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை

பூனாகலையில் 113 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி; வவுனியாவில் 37.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை

பூனாகலையில் 113 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி; வவுனியாவில் 37.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2019 | 4:20 pm

Colombo (News 1st) இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகப்படியான மழை வீழ்ச்சி பதுளை – பூனாகலை பகுதியில் பதிவாகியுள்ளது.

பூனாகலையில் 113 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் அதிக வெப்பநிலையாக 37.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை வவுனியாவில் பதிவாகியுள்ளது.

வவுனியாவில் சாதாரண வெப்பநிலையை விட மூன்று பாகை செல்சியஸ் அதிகளவாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்