பிரெக்ஸிட் ஒத்திவைப்பிற்கு பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்

பிரெக்ஸிட் ஒத்திவைப்பிற்கு பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்

பிரெக்ஸிட் ஒத்திவைப்பிற்கு பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2019 | 10:00 am

Colombo (News 1st) பிரெக்ஸிட் திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இணங்கியுள்ளதாக, டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

பிரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், சுமார் 5 மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்தநிலையில், இந்தக் காலத்தை வீண்விரயப்படுத்த வேண்டாம் என, குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர் பேசிய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க், இதை வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முடிந்தவரை விரைவில் வௌியேறுவதே பிரித்தானியாவின் இலக்கு என, அந்நாட்டு பிரதமர் தெரேசா மே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்