ரயன் வேன் ரூயனுக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்

நடிகர் ரயன் வேன் ரூயனுக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 11-04-2019 | 4:10 PM
Colombo (News 1st) நடிகர் ரயன் வேன் ரூயன் (Ryan Van Rooyen) எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று மாத்தறை பதில் மேலதிக நீதவான் ஆரியசேன பனன்கல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மாகந்துரே மதுஷுடன் துபாயில் கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வேன் ரூயன் அண்மையில் நாடு கடத்தப்பட்டிருந்தார். விமான நிலையத்தில் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து அவர் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரின் காரில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.