கொழும்பு துறைமுகத்தில் துறைசார் நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பு

கொழும்பு துறைமுகத்தில் துறைசார் நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பு

கொழும்பு துறைமுகத்தில் துறைசார் நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2019 | 8:47 am

Colombo (News 1st) கொழும்புத் துறைமுகத்தில் துறைசார் நிபுணர்கள் 80,000 பேருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைக்கப்படவுள்ள துறைமுக நகரத்திற்கான மண் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நிர்மாணப் பணிகளில் இந்த நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக உள்ளூராட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகளைத் தெளிவுபடுத்தும் செயலமர்வின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்