கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகளின் விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகளின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2019 | 1:20 pm

Colombo (News 1st) நாட்டின் தென் கடற்பரப்பில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் 9 பேரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அன்றைய தினம், ஈரானிய மொழிபெயர்ப்பாளரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (11ஆம் திகதி) நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பேருவளை கடற்பிராந்தியத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொடர்பில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை மற்றும் தொலைபேசி கலந்துரையாடல் அறிக்கை ஆகியவற்றை மன்றுக்கு சமர்ப்பிதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிற்கு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்தோடு, சந்தேகநபர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை விரைவில் துரிதப்படுத்துமாறும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்க்குமாறும் பிரதம நீதவான் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்