by Staff Writer 11-04-2019 | 9:47 AM
Colombo (News 1st) இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.
மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஜோடி 116 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டது.
கிறிஸ் கெய்ல் 36 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்றதுடன், ராகுல் 34 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் 3 விக்கெட்களும் 62 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
துடுப்பாட்ட வீரர்கள் மூவர் 10 க்கும் குறைவான ஓட்டங்களை பெற்றனர்.
அணித்தலைவர் கிரன் பொலார்ட் 31 பந்துகளில் 83 ஓட்டங்களை விளாசினார்.
பந்துவீச்சில் 21 ஓட்டங்களில் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து, மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியிலக்கை கடந்தது.