எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கை

எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கை

எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கை

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2019 | 6:58 am

Colombo (News 1st) நாட்டில் எரிபொருள் விலைத்திருத்தம் நடைமுறைப்படுத்தாது இருப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை தொடர்ச்சியாக அதிகரித்தாலும் பண்டிகைக் காலத்தை கருத்தில்கொண்டு இதை நடைமுறைப்படுத்தாது இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, நிதி அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

விலைச் சூத்திரத்திற்கு அமைவாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் எரிபொருள் விலையை தீர்மானிக்கும் குழு நேற்று மாலை கூடியபோதே விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தாது இருப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்