by Staff Writer 11-04-2019 | 12:08 PM
Colombo (News 1st) இலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவராக மங்கள யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனக்கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வு இன்று (11ஆம் திகதி) முற்பகல் நடைபெற்றுள்ளது.
இதேவேளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் சந்திரிக்கா விஜேரத்ன இன்று காலை ஜனாதிபதியிடம் தமக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.