ஆட்சி மாற்றத்தின்போது சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் ஐ.தே.க-வினர் சபாநாயகரிடம் முறைப்பாடு

ஆட்சி மாற்றத்தின்போது சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் ஐ.தே.க-வினர் சபாநாயகரிடம் முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

11 Apr, 2019 | 8:58 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரிடம் கடிதமொன்றை இன்று கையளித்தனர்.

சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்ததாவது,

கடந்த ஒக்டோபர் மாதம் அரசியலமைப்பிற்கு முரணாக சதி செய்து அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு, சபாநாயகர் இணக்கம் தெரிவிக்காமையினால், ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அப்போதைய வௌிவிவகார அமைச்சராக செயற்பட்ட சரத் அமுணுகம மற்றும் வௌிவிவகார செயலாளர் ஆகியோர், வௌிநாட்டு தூதுவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த கடிதத்தை நாம் வாசிக்கும் போது, சபாநாயகரை இழிவுபடுத்தி, அவர் மீது குற்றஞ்சுமத்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறி, வௌிவிவகார அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பது தௌிவாகின்றது. இதன் காரணமாக பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் கட்டளைகள் சட்டத்திற்கு அமைய இது தண்டனைக்குரிய குற்றமாகும். சிறப்புரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் சபாநாயகரிடம் இன்று நாம் தெளிவுபடுத்தினோம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்