by Chandrasekaram Chandravadani 11-04-2019 | 10:16 AM
Colombo (News 1st) அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக, அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் (Scott Morrison) அறிவித்துள்ளார்.
பிரதிநிதிகள் சபையின் 151 ஆசனங்களுக்குமான தேர்தல் இதன்போது நடாத்தப்படவுள்ளது.
இதன்போது, காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பாரிய போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கன்சர்வேட்டிவ் அரசாங்கம் மூன்றாவது தடவையாக வெற்றி பெறுமா அல்லது தொழிற்கட்சியினரிடம் தோல்வியடையுமா என்பதை, இந்தத் தேர்தல் தீர்மானிக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.