தலாய் லாமா வைத்தியசாலையில் அனுமதி

மதத் தலைவர் தலாய் லாமா வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 10-04-2019 | 12:08 PM
Colombo (News 1st) திபெத்திய மதத் தலைவரான தலாய் லாமா (Dalai Lama) டில்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது உடல்நிலை சீராகவுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. தலாய் லாமாவின் உடல்நிலையில் சில கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து, அவர் டில்லிக்கு சென்றதாக, தலாய் லாமாவின் பிரத்தியேக உதவியாளர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், வைத்திய பரிசோதனையின் போது அவருக்கு இதயத் தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்த வைத்தியர்கள் உடல்நிலை சீராகவுள்ளதாகவும் ஆனால் எதிர்வரும் ஓரிரு நாட்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் கூறியதாக, உதவியாளர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார். சீன ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிப்பதற்காக 1959 ஆம் ஆண்டு 14 ஆவது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தமை குறிப்பிடத்தக்கது.