காஷ்மீர் பிரச்சினை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர்

காஷ்மீர் பிரச்சினையை தொடரவிட முடியாது - பாகிஸ்தான் பிரதமர்

by Staff Writer 10-04-2019 | 8:22 AM
Colombo (News 1st) காஷ்மீர் பிரச்சினையை மேலும் தொடர விட முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) தெரிவித்துள்ளார். அணுவாயுதங்களைக் கொண்ட நாடுகள், பேச்சுவார்த்தை மூலமாக மாத்திரமே பாகிஸ்தானுடனான பிரச்சினையை தீர்ப்பதற்கு முனைய வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். அண்மையில் காஷ்மீர் - புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தியாவில் இடம்பெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு, இந்தத் தாக்குதலை பிரசார உத்தியாக பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்துவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து, பாரதீய ஜனதா கட்சியினரால் தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆகவே, காஷ்மீர் பிரச்சினையை மேலும் தொடர விட முடியாது என இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரான இம்ரான் கான், கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது. த்தக்கது.