தேர்தலில் யார் வெற்றி பெற்றவர் என்பதில் குழப்பம்

இஸ்ரேலிய பொதுத்தேர்தலில் யார் வெற்றி பெற்றவர் என்பதில் குழப்பம்

by Staff Writer 10-04-2019 | 9:26 AM
Colombo (News 1st) இஸ்ரேலிய பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றவர் யார் என்பது தொடர்பில் குழப்பம் நிலவுகின்றது. தேர்தலில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு 33 தொடக்கம் 36 ஆசனங்களை கைப்பற்றியுள்ள அதேவேளை, ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் பெனி கன்ட்ஸ் (Benny Gantz) 36 தொடக்கம் 37 வரையான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இருவரும் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலில் மிக நெருக்கமான மோதல் நிலவும் தேர்தலாக இந்தத் தேர்தல் அந்நாட்டு அரசியல் வரலாற்றில் கருதப்படுகின்றது. இதேவேளை, தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஐந்தாவது தடவையாக தேர்தலில் போட்டியிட்டார். எனினும், அவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளதுடன் ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் பெனி கன்ட்ஸின் கடும் சவாலையும் எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இதுவரை எந்தக் கட்சியும் பெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சியமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.