விளையாட்டுத்துறை சட்டத்தில் திருத்தம்: ஹரீன் பெர்னாண்டோவின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

விளையாட்டுத்துறை சட்டத்தில் திருத்தம்: ஹரீன் பெர்னாண்டோவின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

விளையாட்டுத்துறை சட்டத்தில் திருத்தம்: ஹரீன் பெர்னாண்டோவின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2019 | 9:44 pm

Colombo (News 1st) 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விளையாட்டுத்துறையின் மேம்பாட்டிற்கான வழிகாட்டல்களை வழங்கும் 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தில் 1993, 1998, மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ள புதிய திருத்தங்களில்,

1. தேசிய விளையாட்டு சங்கங்களின் வருடாந்த கணக்கறிக்​கையை கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை செய்யும் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையூடாக கணக்காய்வு செய்வதற்கு அனுமதி வழங்குதல்.

2. விளையாட்டுத்துறை சட்டத்தின் பிரகாரம் கட்டளைகளை வகுப்பதற்கு அமைச்சருக்கு உள்ள இயலுமை என்னவென்பதை விரிவாகத் தெளிவுபடுத்துதல்

3. விளையாட்டுத்துறை சட்டத்தின் பிரகாரம் விதிக்கப்படுகின்ற அபராதத் தொகையை அதிகரித்தல், மெய்வல்லுநர் போட்டிகளில் சர்வதேச அங்கீகாரத்தை வென்றுள்ள ஒலிம்பிக் அல்லது அதற்கு இணையான போட்டியொன்றில் பங்கேற்ற வீரர்கள் இருவரையேனும் தேசிய விளையாட்டு சபைக்கு உள்வாங்குதல்

4. விளையாட்டுத்துறை சட்டத்தின் பிரகாரம் தவறிழைத்தவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்