பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை

பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை

பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2019 | 8:50 am

Colombo (News 1st) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (10ஆம் திகதி) முதல் விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மேலதிகமாக 65 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையினால் மேலதிகமாக 1500 பஸ்களும் தனியார் பஸ்கள் 2200 இலிருந்து 2600 வரையான பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்