ஜனாதிபதி ஊடக விருது விழா: இரண்டு விருதுகளை சுவீகரித்த சக்தி FM

ஜனாதிபதி ஊடக விருது விழா: இரண்டு விருதுகளை சுவீகரித்த சக்தி FM

ஜனாதிபதி ஊடக விருது விழா: இரண்டு விருதுகளை சுவீகரித்த சக்தி FM

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2019 | 6:59 pm

Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி ஊடக விருது விழாவில் சக்தி FM இரண்டு விருதுகளை சுவீகரித்துள்ளது.

இதேவேளை, TV1 தொலைக்காட்சியும் ஒரு விருதைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சிறந்த வானொலி நிகழ்ச்சிக்கான விருதை ”ஆதியோகி” நிகழ்ச்சிக்காக சக்தி FM அலைவரிசை பிரதானி R.P.அபர்ணா சுதன் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, சிறந்த வானொலி ஆய்வு நிகழ்ச்சிக்கான விருதை ”வணக்கம் தாயகம்” நிகழ்ச்சிக்காக ஞானகுமாரன் கணாதீபன் வெற்றி பெற்றார்.

சிறந்த ஆங்கில மொழி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருதை TV1 தொலைக்காட்சி அறிவிப்பாளர் பேர்னடின் ஜயசிங்ஹ சுவீகரித்தார்.

2018 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி ஊடக விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்