ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முன்னிலை

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முன்னிலை

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முன்னிலை

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2019 | 8:30 am

Colombo (News 1st) ஐ.பி.எல். கிரிக்கட் தொடர் தரவரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னிலையிலுள்ளது.

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்குத் தீர்மானித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

109 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 17 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 7 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மஹேந்திர சிங் தோனி தலைமையில் பெற்ற 99 ஆவது வெற்றியாகவும் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்