லிபிய வான் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

லிபிய வான் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

by Chandrasekaram Chandravadani 09-04-2019 | 8:06 AM
Colombo (News 1st) லிபிய தலைநகர் திரிப்போலியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலுக்கு, ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. லிபிய தலைநகர் திரிப்போலி விமான நிலையத்திற்கு அருகில் நேற்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், திரிப்போலியில் இயங்கக்கூடிய ஒரேயொரு விமான நிலையமான மிட்டிகா சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை விசனம் வௌியிட்டுள்ளது. தாக்குதலில் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையாயினும் பல விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான பயணிகள் வௌியேற்றப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தளபதி கலிபா ஹப்தரின் படையினர் மீது குற்றம் சுமத்தியுள்ள ஐ.நா. சபை, குறித்த படை தலைநகரை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், தளபதி கலிபா ஹப்தர் ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்ற முயற்சிப்பதாக லிபிய பிரதமர் பயேஸ் அல் செராஜ் குற்றஞ்சுமத்தியுள்ளார். இதேவேளை, திரிப்போலியில் இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாக 2,800 பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த வாரம் முதல் இடம்பெற்று வரும் மோதல்களினால் பொதுமக்கள் மற்றும் ஹப்தரின் படையினர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.