திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 09-04-2019 | 6:52 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 02. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்தி வௌியிட்டுள்ளது. 03. நாளையிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 04. அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகள் மற்றும் பலநிறங்களில் மின்குமிழ்களை பொருத்தியுள்ள வாகனங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 05. இலங்கை அரசு மரணதண்டனையை தொடர்ந்தும் இடைநிறுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 06. துபாயில் மாகந்துரே மதூஷூடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் கிர்ஸ்ட்ஜென் நியெல்சன் (Kirstjen Nielsen) தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 02. யேமனில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். விளையாட்டுச் செய்தி 01. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபால, கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி வகிப்பதை சவாலுக்குட்படுத்தி 3 விளையாட்டுக் கழகங்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் கடிதம் எழுதியுள்ளன.