ரஜினிகாந்தின் 167 ஆவது படத்தின் பெயர் தர்பார்

ரஜினிகாந்தின் 167 ஆவது படத்தின் பெயர் தர்பார்

ரஜினிகாந்தின் 167 ஆவது படத்தின் பெயர் தர்பார்

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2019 | 4:29 pm

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167 ஆவது படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் First Look Poster இன்று காலை வெளியிடப்பட்டது.

இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ரஜினி நடிக்கும் 167 ஆவது படமாகும். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்பிற்கு முழுமையாகத் தயாராகி விட்டது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்திற்கும் முருகதாஸின் ‘கத்தி’ படத்திற்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை (10) தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் First Look Poster- ஐ தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்