யாழில் வெடிச்சம்பவத்தில் சிறுவன் காயம்

யாழில் வெடிச்சம்பவத்தில் சிறுவன் காயம்

யாழில் வெடிச்சம்பவத்தில் சிறுவன் காயம்

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2019 | 4:13 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நிலாவரை பகுதியில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் சிறுவனொருவன் காயமடைந்துள்ளான்.

14 வயதான சிறுவனே சம்பவத்தில் காயமடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காயமடைந்த சிறுவன் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைக்குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்திருக்கக்கூடும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்