சஞ்சய் மித்ரா இன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

சஞ்சய் மித்ரா இன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

சஞ்சய் மித்ரா இன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

எழுத்தாளர் Fazlullah Mubarak

08 Apr, 2019 | 7:48 am

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுடன் உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குழுவினர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நாட்டுக்கு வருகை வந்துள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் இடம்பெறும் பாதுகாப்பு விவாதத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவத்துக்கும் இடையில் இடம்பெறும் பயிற்சி அமர்வுகள் தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா உள்ளிட்ட குழுவினர் நாளை வரை நாட்டில் தங்கியிருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்