குண்டுத் தாக்குதலில் 7 குழந்தைகள் பலி

குண்டுத் தாக்குதலில் 7 குழந்தைகள் பலி

குண்டுத் தாக்குதலில் 7 குழந்தைகள் பலி

எழுத்தாளர் Fazlullah Mubarak

08 Apr, 2019 | 8:10 am

யேமனில் நேற்றிரவு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகே இடம்பெற்ற இந்தத் தாக்குதலின்போது 7 குழந்தைகள் பலியாகியதாகவும் மேலும் 54 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் கூட்டுப்படைகளின் சதியாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யேமனிய தலைநகர் சனாவிலுள்ள கிடங்கொன்றிலிருந்து இந்த குண்டு வெடித்துள்ளது. குறித்த பிரதேசத்திலிருந்த 7 குழந்தைகளே சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தலைநகர் சனா, 2014 ஆம் ஆண்டிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசமிருப்பதால் அப்பகுதி அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினால் மூடப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதன் பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த தாக்குதலுக்கு இதுவரை எவ்வித அமைப்புக்களும் உரிமை கோரவில்லை.

ஈரானிய பிணைப்பு கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து 2015 ஆம் ஆண்டிலிருந்து சவூதி கூட்டுப் படை தொடர் தாக்குதலை நடத்திவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்