அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் இராஜினாமா

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் இராஜினாமா

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் இராஜினாமா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Apr, 2019 | 4:58 pm

Colombo (News 1st) அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் கிர்ஸ்ட்ஜென் நியெல்சன் (Kirstjen Nielsen) தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய எல்லை கொள்கைகளை அமுல்படுத்தியதுடன் புகலிடக்கோரிக்கையாளர்களின் குடும்பங்களின் பிரிவுக்கு காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநியைில், தாம் பதவி விலகுவதற்கான காரணத்தைத் தெரிவிக்காத கிர்ஸ்ட்ஜென் நியெல்சன், இதுவே சரியான தருணம் எனவும் தாம் கடமையில் இணைந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது அமெரிக்கா பாதுகாப்பாக உள்ளதாகவும் தமது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு செயலாளராக தற்காலிகமாக சுங்க மற்றும் எல்லைப்பாதுகாப்பு ஆணையாளர் கெவின் மெக்அலீனன் (Kevin McAleenan) கடமையாற்றுவார் என டொனால்ட் ட்ரம்ப், டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப தெற்கு எல்லைப்பகுதியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பார்வையிட்ட நிலையில், கிர்ஸ்ட்ஜென் நியெல்சன் gதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்