கேரள கஞ்சாவுடன் வெவ்வேறு இடங்களில் இருவர் கைது

10 கிலோ கேரள கஞ்சாவுடன் வெவ்வேறு இடங்களில் இருவர் கைது

by Staff Writer 07-04-2019 | 11:15 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பூம்புகார் கடற்கரையில் 8 கிலோ 200 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலதிக விசாரணைக்காக கிளிநொச்சி தலைமையக பொலிஸாரிடம் சந்தேகநபர் ஒப்படைக்கக்கப்பட்டுள்ளார்.