10 கிலோ கேரள கஞ்சாவுடன் வெவ்வேறு இடங்களில் இருவர் கைது

10 கிலோ கேரள கஞ்சாவுடன் வெவ்வேறு இடங்களில் இருவர் கைது

10 கிலோ கேரள கஞ்சாவுடன் வெவ்வேறு இடங்களில் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2019 | 11:15 am

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – பூம்புகார் கடற்கரையில் 8 கிலோ 200 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக கிளிநொச்சி தலைமையக பொலிஸாரிடம் சந்தேகநபர் ஒப்படைக்கக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்